Ads (728x90)


இந்தியாவின் தலைசிறந்த நீச்சல் வீராங்கனையான தெலுங்கானாவை சேர்ந்த சியாமளா கோலி 30 கிலோமீற்றர் நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

47 வயதான நீச்சல் வீராங்கனை சியாமளா கோலி நேற்று இலங்கையின் தலை மன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடியை பாக்கு நீரிணை ஊடாக 13 மணி 40 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார். வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்கள் இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இச்சவால்மிக்க பயணத்தை உலகளவில் வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இரண்டாவது பெண்மணியாகவும் 13ஆவது நீச்சல் வீரராகவும் சியாமளா கோலி தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

அனிமேஷன் பட தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என பல்வேறு ஆளுமைகளை கொண்ட சியாமளா கோலி,  கடந்த நான்கு வருடங்களாக பாக்கு நீரிணையை கடப்பதற்கான நீச்சல் சவாலுக்குரிய பயிற்சிகளை பெற்றிருந்தார்.

பாக்கு நீரிணையை நீந்தி கடக்கும் சாதனையானது சகல பெண்களுக்குமான ஒரு பாரிய சாதனையாக பதியப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget