மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த அனுமதிப்பதற்கும் இந்தியா, இலங்கை அரசுக்கு ஐ.நா.மனித உரிமைகள் சபையில் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை தங்கள் ஆதரவைப் பெற முயற்சித்த போதிலும், ஐ.நா. மனித உரிமைகள் சபை வாக்களிக்கும் போது இந்தியா நேற்று நடுநிலமை வகித்தது.
மனித உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் ஆக்கபூர்வமான சர்வதேச உரையாடல், அத்தகைய முயற்சிகளுக்கு ஐ.நாவின் ஆதரவின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களால் ஒத்துழைப்பது ஆகியவற்றுக்கான பிராந்தியங்களின் முதன்மை பொறுப்பை இந்தியா நம்புகின்றது.
அண்டை நாடாக இந்தியா 2009 க்கு பின்னர் இலங்கையில் உடனடி உதவிப் பணிகள், மீள்குடியமர்வு, மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு பங்களித்துள்ளது.
எங்கள் அபிவிருத்தி உதவிகள், குறிப்பாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பது மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் மனித உரிமைகள் பற்றிய கேள்விக்கான இந்தியாவின் அணுகுமுறை இரண்டு அடிப்படைக் கருத்துகளால் வழிநடத்தப்படுகிறது. ஒன்று இலங்கைத் தமிழர்கள் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதியுடன் வாழ எங்கள் ஆதரவு, மற்றையது இலங்கையின் ஒற்றுமை, உறுதித்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் உள்ளது. இந்த இரண்டு குறிக்கோள்களும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிப்பதாக நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் மூலம், அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதிசெய்வது உள்பட, 13ஆவது திருத்தத்துடன் அரசியல் அதிகாரப் பகிர்வு குறித்த தனது உறுதிப்பாட்டை நிறைவேற்ற இலங்கை அரசுக்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை இந்தியா ஆதரிக்கின்றது.
அதே நேரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பணிகள் ஐ.நா பொதுச் சபையின் தொடர்புடைய தீர்மானங்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு இணங்க இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment