Ads (728x90)

யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் இன்று காலை புற்றுநோய் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர் திருமதி ஜானகி விதான பத்திரன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

உலகில் இறப்புகளுக்கான காரணமாக இரண்டாவது இடத்தில் புற்றுநோய் காணப்படுகின்றது. எனவே அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து  தடுப்பதன் மூலம் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும். 

குறித்த நிலையமானது புற்றுநோய் அறிகுறி எதுவும் ஏற்பட முன்னர் ஒரு சாதாரண மனிதருக்கு  எதிர்காலத்தில் புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏதும் உள்ளதா? என்பதை பற்றி கண்டறிவதற்கான அல்லது புற்றுநோய் ஏற்பட்டுள்ளதா? என்பதை பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒரு நிலையமாகும். 

இந்நிலையம் புற்று நோயாளர்களுக்கான நிலையம் அன்றி புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு கூட்டியே அதனை ஏற்படாமல் தடுப்பதற்கு அல்லது அதன் ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிவதற்கான ஒரு நிலையமாக தொழிற்படும். ஒரு வாரத்தில் 7 நாட்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராசா தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களுடைய புற்றுநோய் சம்பந்தமான சந்தேகங்களை குறித்த சிகிச்சைநிலையத்திற்கு வருகை தந்து தெரிந்து கொள்ளலாம். கொழும்புக்கு அடுத்ததாக யாழ்.மாவட்டத்தில் குறித்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Recent News

Recent Posts Widget