Ads (728x90)


யாழ்ப்பாணம் மரக்கறி சந்தைத்தொகுதி மற்றும் திருநெல்வேலி பொதுச்சந்தை இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நகர மரக்கறி சந்தைத்தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 09 வியாபாரிகளுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 06 உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் வியாபாரிகளும், 03 மரக்கறி வியாபாரிகளும் இதில் அடங்குகின்றனர்.

அதனால் சந்தைத்தொகுதியின் முழு வியாபாரிகளும் சுயதனிமை படுத்தப்பட்டுள்ளனர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.திருநெல்வேலி பொதுச்சந்தை தொகுதியில் எடுக்கப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை சந்தை முடக்கப்படுவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இன்று தொற்றுக்குள்ளான 24 போில் சந்தை வியாபாரிகள் மற்றும் சந்தையை சூழவுள்ள கடைத்தொகுதி வியாபாரிகளும் அடங்கியிருக்கும் நிலையில் திருநெல்வேலி பொதுச்சந்தைத் தொகுதி முழுமையாக இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடக்கப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget