Ads (728x90)

யாழ்.பல்கலைக்கழக சித்த வைத்திய பிரிவு, இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகிய இரண்டையும் பீடங்களாகத் தரமுயர்த்துவதற்கு கடந்த வருடம் பேரவையின் சிபார்சுடன் துணைவேந்தரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேற்படி கோரிக்கை கடந்த மாதம் இடம்பெற்ற பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இது வரை காலமும் சித்த மருத்து அலகாக இயங்கி வந்த சித்த வைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாக மாற்றுவதற்கும், கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை சேர்.பொன் இராமநாதன் நிகழ்த்துகை மற்றும் கட்புல கலைகள் பீடமாக உருவாக்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget