நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போக்குவரத்து விவகாரங்களுக்கான அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையுடன் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 05 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நிரந்த நியமனம் வழங்கவும், சாரதி பயிற்றுநர்களுக்கான நீண்டகால வெற்றிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள துணை சாலைகளை பேருந்து தரிப்பிடங்களாக மட்டுமே பயன்படுத்தவும், அவை தொடர்பான நிர்வாகப் பணிகளை பிரதான சாலைகள் மட்டுமே மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் நாடு முழுவதும் பேருந்து போக்குவரத்து சேவையை வினைத்திறனுடன் மாற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்க தேவையான பரிந்துரைகளை வழங்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க வேண்டிய அவசியம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுடன், பேருந்து சாரதிகளுக்கு சிறப்பு சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment