Ads (728x90)

மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரெண்டு தொகுதிகளைக் கொண்ட இந்து கலைக்களஞ்சியம், புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்து கலைக்களஞ்சிய உருவாக்கப் பணி 2014 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு தொகுதிகளை நிறைவு செய்திருந்தது.

அக்காலப்பகுதி, தற்போதைய பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இச்செயற்றிட்டத்திற்கான ஊக்கம் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கமைய மீள்பதிப்புச் செய்யப்பட்ட இந்து கலைக் களஞ்சியத்தின் ஆரம்ப பிரதிகள் பிரதமரினால் இந்து மதகுருமார்களுக்கு கையளிக்கப்பட்டன.

இலங்கையின் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ஆற்றும் தனித்துவமான சேவைக்கு இதன்போது இந்து மதகுருமார் பாராட்டு தெரிவித்தனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget