Ads (728x90)

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை தனது 80 ஆவது வயதில் இன்று அதிகாலை சுகயீனம் காரணமாக காலமானார்.

நீண்ட காலம் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறை மாவட்ட ஆயர், யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் காலமானார்.

ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை மிக தீவிரமாக ஆதரித்த அவர், அதற்காக தனது இறுதி மூச்சுவரை குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget