யாழ்.நகர வர்த்தகர்கள், வர்த்தக நிலைய பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 431 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முல்லோியா ஆய்வுகூடத்திற்கு அனுப்பபட்டிருந்தது.
அவர்களில் 34 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளது. அவர்களில் 22 பேர் யாழ்.நவீன சந்தை தொகுதியுடன் தொடர்புடையவர்கள் எனவும், மிகுதி 12 பேரும் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேற்படி 22 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புடைய வர்த்தக நிலையங்கள் சுகாதார பிரிவினால் மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment