யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளன. எனினும் திரையரங்குகளை மூடவில்லை என எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதனால் அது தொடர்பில் ஆராயப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment