Ads (728x90)

திருநெல்வேலி பொதுச்சந்தை பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களில் கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இனம் காணப்பட்ட கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மீளத்திறக்க அனுமதிப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில் திருநெல்வேலி பொதுச்சந்தை கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும்  பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை முதல் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget