வெள்ளை அரிசி, நாட்டரிசி, வெள்ளை சீனி, பருப்பு, கோதுமை மா, உப்பு, நெத்தலி, மிளகாய், தேயிலை தூள், சோயா மற்றும் முகக்கவசம் ஆகிய 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி ஆயிரம் ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையம் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது.
1410 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை தற்போதைய சந்தை விலையை 1000 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யலாம்.
இந்நிவாரணப் பொதியில் அடங்கும் பொருட்களும், அவற்றின் விலைகளும் வருமாறு:
1.வெள்ளைச்சீனி 1 கிலோ ரூ.99.00 (முன்னைய விலை ரூ.120)
2.வெள்ளைச் சம்பா 1 கிலோ ரூ.93.00 (முன்னைய விலை ரூ.105)
3.சிவப்பு சம்பா 1 கிலோ ரூ.89.00 (முன்னைய விலை ரூ.105)
4.வெள்ளை நாடு 1 கிலோ ரூ.96.00 (முன்னைய விலை ரூ.110)
5.சிவப்பு பருப்பு 1 கிலோ ரூ.165.00 (முன்னைய விலை ரூ.187)
6.கோதுமை மா 1 கிலோ ரூ.84.00 (முன்னைய விலை ரூ. 105)
7.கட்டி உப்பு 1 கிலோ ரூ.43 (முன்னைய விலை ரூ.82)
8.நெத்தலி 200கிராம் ரூ. 115.00 (முன்னைய விலை ரூ.286)
9. LSL மிளகாய் வெட்டுத்தூள் 100கிராம் ரூ.83(முன்னைய விலைரூ.120)
10. சோயாமீற் 50 கிராம் ரூ.35 (முன்னைய விலை ரூ.35)
11. STC தேயிலை 100 கிராம் ரூ.95 (முன்னைய விலை ரூ.135)
12. முகக்கவசம் 1 ரூ.14.00 (முன்னைய விலை ரூ.20)
இதேவேளை 27 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் இதே முறையில் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

Post a Comment