மாகாண சபை தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. தேர்தல் முறைமைக்கு தீர்வு கண்டதன் பின்னர் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. பழைய தேர்தல் முறையிலா அல்லது புதிய தேர்தல் முறையிலா மாகாண சபை தேர்தலை நடத்துவது என்ற சிக்கல் நிலை காணப்படுகின்றது.
இதற்கு கடந்த அரசாங்கத்தின் அரச தலைவர்கள் பொறுப்பு கூற வேண்டும். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என கூறிக் கொள்பவர்கள் மாகாண சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
தேர்தலை விரைவாக நடத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் அமைச்சரவையில் யோசனை முன்வைத்துள்ளார். கட்சி தலைவர் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து யோசனை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவது உகந்தது என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. அனைத்து தரப்பினரது கருத்துக்களும், யோசனைகளும் பரிசீலனை செய்யப்படுகின்றது.
மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போடுவது ஜனநாயக கொள்கைக்கு முரணானது. மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment