நாட்டின் சப்ரகமுவ, மத்திய, மேல், வடமேல், வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வடகு்கு மாகாணம் முழுவதும் 17ஆம் திகதிவரை மழையுடன் கூடிய காலநிலையே நீடிக்கும் என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளரும், பிரபல காலநிலை அவதானியுமான நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.
வடக்கு மாகாணம் முழுவதும் பொதுவாக காலை வேளைகளில் வெப்பமான காலநிலை நிலவும். எனினும் வளிமண்டலத்தில் கீழ் காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுவதனால் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. குறிப்பாக இடி, மின்னல் தொடர்பில் பொதுமக்கள் மிக விழிப்புடன் இருப்பது அவசியமானதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment