ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஹிட்லராக மாறும் சாத்தியக்கூறுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள கருத்திலேயே தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஹிட்லர் ஒருவர் காணப்பட்டால் அது இலங்கைக்கு நன்மை பயக்கும் விடயம் என தெரிவிக்கப்படுவதை அறிந்துள்ளேன். இவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களிற்கு நான் ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இலட்சக்கணக்கான இறப்புகளுக்கும், கற்பனைக்கு அப்பாற்றபட்ட மனித துயரங்களுக்கும், விரக்திக்கும் காரணமாகயிருந்தவர் ஹிட்லர். எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் நிச்சயமாக முன்மாதிரியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாடின்மைக்காக மக்கள் அவரை குற்றம் சாட்டுகின்றனர். ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால் எவரும் குறை கூறமாட்டார்கள். குற்றம் சாட்டமாட்டர்கள். ஜனாதிபதி அவ்வாறு செயற்பட விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment