இச்செயற்பாடு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமுலாக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் உட்பட ஏராளமானவர்கள் இலங்கை வர முடியாமல் சிக்கியிருந்தனர். பின்னர் அவ்வாறு சிக்கியிருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை நாட்டுக்கு அழைக்கும் செயற்றிட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்தது.
அதனடிப்படையில் தங்களது சொந்த செலவில் நாடு திரும்ப தயாராக உள்ளவர்கள் வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதியுடன் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு குறித்த அனுமதி அவசியமில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment