Ads (728x90)

நாட்­டில் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்­குச் சட்­டம் நாளை வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை 04 மணி­யு­டன் நீக்கப்­ப­ட­வுள்­ளது என இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் சவேந்­திர சில்வா தெரி­வித்­தார். இதற்­கான ஆலோ­ச­னையை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச வழங்­கி­யுள்­ளார் என­வும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்­குச் சட்­டம் தளர்த்­தப்­பட்ட பின்­னர் நாடு எவ்­வாறு செயற்­பட வேண்­டும் என்­பது தொடர்­பான சுகா­தார வழி­காட்­டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது புதிய வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தனவினால் வழங்கப்பட்ட வழிகாட்டகளுக்கு அமைய இது வெளியிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அனுமதிக்கப்பட்ட பொது நடவடிக்கைகளில் எவ்வாறு  பொதுமக்கள் ஈடுபடுவது என்பது குறித்த வழிகாட்டல்கள் இதில் உள்ளடங்கியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget