நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்தில் இன்று பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பொலிஸாரின் தடையை மீறி திலீபன் நினைவிடத்திற்கு அருகே கற்பூரம் ஏற்றுவதற்கு முயன்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் யாழ்.நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை பொலிஸார் உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் வடக்கு-கிழக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment