Ads (728x90)

கிராமிய மட்டத்திலான அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை மாவட்ட செயலாளர்களிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும், அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற காணொளி மூலமான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் வாய்ப்புகளை உருவாக்கல், ஜீவனோபாயம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கிராம சேவகர் பிரிவுகளின் மட்டத்தில் நிதி ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget