இது தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர். எவ்வாறாயினும் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான பரிந்துரைகளும், வழிகாட்டலும் அடங்கிய அறிக்கை கடந்த வாரம் கல்வி அமைச்சிடம் சுகாதார அமைச்சு கையளித்திருந்தது.
இந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் பாடசாலைகள் திறக்கப்படும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment