Ads (728x90)

தற்போது அமுலிலுள்ள மாகாண பயணக்கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணியுடன் நீக்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நவம்பர் 01 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையேயான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் உள்ளூர் தொடருந்து சேவைகள் வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேல் மாகாணத்தில் பருவகாலச் சீட்டு வைத்திருக்கும் பயணிகளை மட்டுமே முதல் கட்டத்தின் கீழ் தொடருந்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோவிட்-19 ஒழிப்பு செயலணி பரிந்துரைத்துள்ளது.





Post a Comment

Recent News

Recent Posts Widget