பிள்ளைகள் கூடிய விரைவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 16 மற்றும் 17 வயதான பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உத்தரவின்பேரில் மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரான எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கும் நாட்களில் பெற முடியாமற்போனால் சனிக்கிழமைகளில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலங்களில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்கப்படும் நேரத்தில் தடுப்பூசியைப் பெற செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Post a Comment