இதற்கான புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் திருமண நிகழ்வுகளுக்கு வீதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி உட்புற திருமண நிகழ்வுகளில் 100 விருந்தினர்களும், வெளிப்புற திருமண நிகழ்வுகளில் 150 விருந்தினர்களும் பங்குபற்ற முடியும். எனினும் மதுபான விருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 75 பேர் மட்டும் உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வெளிப்புற இருக்கைகள் கொண்ட உணவகங்களில் அதிகபட்சமாக 100 பேர் உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment