Ads (728x90)

ஒரேநாடு ஒரேசட்டம் செயலணியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூன்று முஸ்லீம் உறுப்பினர்கள் கூட அவசியமில்லை என நான் கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் என்ன நடந்தாலும் இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கின்றார்களா? முஸ்லீம்கள் இருக்கின்றார்களா? என கேட்கின்றார்கள் என தெரிவித்துள்ள அவர் ஏன் அப்படி கேட்கின்றார்கள். திறமையே முக்கியமானது திறமைக்கு வாய்ப்பளிக்கும்போது தமிழர், முஸ்லீம், சிங்களவர்கள் அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

கண்டி தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டால் அதனை யாழ்ப்பாண தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதுவே உண்மை. சொந்த சமூகத்திற்குள்ளேயே ஒற்றுமை இல்லாத சூழ்நிலையில் பிரதிநிதிகளை தெரிவு செய்வது குறித்து நாங்கள் கவனமாகயிருக்க வேண்டும் என அவர்தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget