Ads (728x90)

பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் வௌிவந்துள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான தடுப்பூசிகள் பல்கலைக்கழகங்களிலேயே வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் 20 வயது தொடக்கம் 29 வயது வரையிலான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசியானது யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழங்கப்பட உள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள எந்தவொரு அரச பல்கலைக்கழகத்திலும் கல்வி பயிலும் மாணவர்கள், பணிபுரியும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் தமது பல்கலைக்கழக அடையாள அட்டையினையினை சமர்ப்பித்து யாழ்.பல்கலைக்கழகத்தில் தமது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget