Ads (728x90)

லாவ்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

லிட்ரோ நிறுவனம் தமது எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று முதல் அதிகரிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், லாவ்ஸ் நிறுவனமும் விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது.

லாவ்ஸ் நிறுவனம் தமது எரிவாயுவின் விலைகளை 12.5 கிலோ ரூபா 1,856 இலிருந்து ரூபா 2,840 ஆகவும், 5 கிலோ ரூபா 743 இலிருந்து ரூபா 1,136 ஆகவும் அதிகரித்துள்ளது. 

அண்மையில் பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டதை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,257 ரூபாவாலும், 5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 503 ரூபாவாலும், 2.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 231 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget