Ads (728x90)

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தையில் சம்பள அதிகரிப்பை இரண்டு கட்டங்களில் வழங்க அரசாங்கம் இணங்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அரசாங்கம் வழங்கியுள்ள இத்தீர்வினை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் நாளை கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் அமைச்சரவை உப குழுவின் அறிக்கைக்கு அமைய, 3 கட்டங்களில் 3 வரவு செலவுத் திட்டங்களில் சம்பள உயர்வை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இன்று பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சம்பள அதிகரிப்பை 2 கட்டங்களில் வழங்க அரசாங்கம் இணங்குவதாக தெரிவித்துள்ளதாக சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 2022 ஜனவரியில் முதல் கட்ட சம்பள அதிகரிப்பும், 2023 இல் இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும் அரசாங்கம் இணங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றிய பிரதிநிதிகள், நாளை ஏனைய சங்கங்கங்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget