பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் முதல் கட்டமாக 15 - 19 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முதலில் 19 வயதுடைய மாணவர்களுக்கும் அதன் பின்னர் 18, 17, 16, 15 என கட்டம் கட்டமாக தடுப்பூசிகள் செலுத்தப்படும். மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் ஊடாக தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
குறித்த வயதுடைய பாடசாலைகளிலிருந்து இடை விலகிய மாணவர்கள் தமது பகுதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் ஊடாக தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment