ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 350 ரூபாவினாலும், 400 கிராம் பால் மாவின் விலையை 140 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இறக்குமதி செய்யப்பட்ட பால் மா ஒரு கிலோ கிராம் 1,300 ரூபாவுக்கும், 400 கிராம் பால் மா பக்கெற் 520 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. எனினும் நிதி அமைச்சினால் ஏதாவது வரி அறவீடு மேற்கொள்ளப்பட்டால் இந்த விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் லக்ஸ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்தார்.
Post a Comment