Ads (728x90)

திருகோணமலை, கிண்ணியாவில் படகுப்பாதை கவிழ்ந்ததில் 04 மாணவர்கள் உள்ளிட்ட 06 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்தில் பாடசாலை செல்வதற்காக பயணித்த மாணவர்கள் குறித்த படகுப்பாதையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனர்த்தத்தில் சிக்கிய 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகுப்பாதை ஒன்றே கவிழ்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலம் விவகாரத்தில் தீர்வில்லை எனக்கூறி முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget