Ads (728x90)

அரச நிர்வாகத்திற்கு எதிராக விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளரினால் இதற்கான சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

அரச பொது நிர்வாக அமைச்சகத்தின் இந்த உத்தரவை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிரதேச செயலர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்தாபன கோவைக்கு இணங்க அரச துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிக்கும் பொதுத்துறைப் பணியாளா்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

சில பொதுத்துறை ஊழியர்களின் கருத்துக்கள் குறித்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமைச்சகம் கூறியுள்ளது. குறிப்பாக கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget