கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதை திறக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு
நகரம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் என்பன ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டதால் கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையின் முடிவில் இருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் வரை ஆறு வழிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாலம் அங்கிருந்து ஒறுகொடவத்த வரையும், இங்குறுகடேசந்தி வரையும், துறைமுக நுழைவு பாதை வரையும் என நான்கு வழித்தடங்கள் கொண்ட பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
களனி கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் 380 மீற்றர் நீளம் கொண்டதாகும். 41 ஆயிரத்து 432 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
Post a Comment