Ads (728x90)

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட கோவிட்-19 வைரஸின் புதிய மாறுபாடு காரணமாக தென்னாபிரிக்கா உட்பட ஆறு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோதோ, ஸிம்பாப்வே, சுவாசிலாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

இந்த நாடுகளில் இருந்து எவரேனும் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்திருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget