ஜனநாயக நாடு எனில் போரில் இறந்தவர்களை அமைதியான முறையில் நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு உரிமையுண்டு. அதனை ஆயுதமுனையில் அடக்க முயல்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுதப்படைகள் நடந்து கொண்ட விதம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் இராணுவ ஆட்சிக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Post a Comment