Ads (728x90)

நவம்பர் 08 ஆம் திகதி முதல் முறைப்படி நில எல்லைகளை அமெரிக்கா திறக்க உள்ளது. மேற்படி அமெரிக்க நில எல்லைகள் கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டது.  

எனினும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து கனேடிய நில எல்லைகள் அமெரிக்கா உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட கனேடியர்கள் மட்டுமே நில எல்லைகள் மற்றும் படகுகள் வாயிலாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

அமெரிக்க சுகாதாரத்துறையால் அனுமதி அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்களை மட்டுமே தற்போது அனுமதிக்க உள்ளனர். இதில் பைசர், மாடர்னா, ஆஸ்ட்ராசெனகா மற்றும் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி கலப்பு தடுப்பூசி போட்டவர்களையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவில் அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் பயணிகள் வாய்மொழியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

அமெரிக்காவுக்கு செல்லும் காரணம் தொடர்பிலும் கேட்கப்படலாம். தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான தரவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். QR குறியீட்டுடன் பிரதியெடுக்கப்பட்ட அல்லது டிஜிட்டலாகவோ தடுப்பூசி ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.

எனினும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் நில எல்லைகளை கடக்க அவர்களுக்கு தொற்று இல்லை என்ற சான்றிதழும் தேவை இருக்காது.

கனடாவுக்கு திரும்புவோருக்கும் தொற்று இல்லை என்ற சான்றிதழ் தேவையில்லை. ஆனால் கனடாவுக்கு திரும்பும் 72 மணி நேரத்திற்குள் PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது 05 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொதுவானது என கனேடிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget