கொரோனா தாக்கத்தின் காரணமாக புகையிரத அஞ்சல் விநியோக சேவை இதுவரை காலமும் இடை நிறுத்தப்பட்டிருந்தது. இன்று முதல் புகையிரத அஞ்சல் சேவை மீள ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் புகையிரத பொதி விநியோக சேவை, புகையிரத பயணச்சீட்டு ஒதுக்கிக் கொள்ளல், சுற்றுலா வலயங்களில் புகையிரத நிலையத்தில் அறைகள் ஒதுக்கிக் கொள்ளல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று முதல் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பமாகும்.
தூரபிரதேச புகையிரத சேவைகளும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய ஆரம்பமாகும். ஆகவே புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவது கட்டாயமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment