Ads (728x90)

இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இந்த எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக  திணைக்களம் தொிவித்துள்ளது.

இலங்கையின் தென் கிழக்கில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதிக மழை பெய்யவுள்ளது.

இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget