Ads (728x90)

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவைகள் நாளை 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார். 

அதன்படி 03 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும் புகையிரதம் காங்கேசன்துறையை வந்தடையும். மறுநாள் 04 ஆம் திகதி காலை 5.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு கல்கிசையை சென்றடையும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு ஒரு சேவையும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு சேவையுமாக இப்புகையிரத சேவை வழமைபோல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget