Ads (728x90)

நாடு பூரகவும் கொரோனா வைரசு பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள சகல பாடசாலைகளும் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை ஆரம்பமாகவுள்ளன.

தரம் 10,11,12 மற்றும் தரம் 13 ஆம் வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக மாணவர்களை, பாடசாலைகளுக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தரம் 6, 7, 8 மற்றும் தரம் 9 க்கு உட்பட்ட அனைத்து வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget