Ads (728x90)

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவிக்கு கலகொடஅத்தே ஞானசார தேரரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறக்கும் இரண்டு இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்துள்ளார்.

நாட்டில் திட்டவட்டமான சட்டம் இயற்றும் முறை இருக்கும் போது இவ்வாறான செயலணியின் ஊடாக சட்டம் இயற்றச் செல்வது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக ஜனாதிபதியை சந்தித்த அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஜனாதிபதி செயலணியை தாம் நியமித்திருப்பது இந்த விடயம் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காகவே எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

சட்டங்களை உருவாக்குவது தொடர்பில் நீதி அமைச்சரின் உதவியை நிச்சயமாக நாடவுள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி நியமனம் தொடர்பில் சிலர் மத்தியில் தவறான கருத்து நிலவுவதாகவும் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget