Ads (728x90)

அதிபர்-ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக முன்வைத்த கோரிக்கைக்கு மூன்று கட்டங்களில் இல்லாமல் ஒரே தடவையில் வழங்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அரச தரப்புக்கும், ஆசிரியர் சங்க தலைவர்களுக்கும் இடையே நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு 7.5 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் இச்சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.  

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் உடனடியாக தீர்க்கப்படும் என பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச எமக்கு உறுதியளித்துள்ளார்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் இடம் பெற்றுள்ளதாகவும், அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார் எனவும் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் செயலாளரும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget