ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தில் இருந்து அக்ரஹார காப்புறுதித் திட்டத்திற்காக ஒரு தொகையை கழிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இடைநிறுத்தப்படுவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் விதிகளை நடைமுறைப்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் மேலதிக கலந்துரையாடல்கள் நிலுவையில் உள்ளதாகவும், ஆட்சேபனைகளைப் பரிசீலித்து பொருத்தமான முடிவு எட்டப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
2016 ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன் ஓய்வு பெற்ற அனைத்து அரச ஊழியர்களிடமிருந்தும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓய்வூதியத்தில் இருந்து 600 ரூபாயும் மற்றும் 70 வயதுக்குட்பட்டவர்களின் ஓய்வூதியத்திலிருந்து 400 ரூபாயும் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment