Ads (728x90)

வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களை பயன்படுத்தி சமூக காவல் குழுக்கள் (பிரஜா காவல்த்துறை) உருவாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் மேற்பார்வையின் கீழ் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்பில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டவுள்ளது. 

வடக்கு மாகாணத்தில் இளம் குற்றவாளிகளின் குற்றங்களை நிறுத்துவதற்கான வழிகாட்டுதல் என்ற கருத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் சமூக காவல் குழுக்கள் செயல்படுத்தப்படும்.

இதற்காக வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களை தெரிவு செய்து அவர்களின் விசேட திறமைகளை இனங்கண்டு இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இந்த அணிகளை தெரிவு செய்யுமாறு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதேச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget