இன்று நவம்பர் 16 ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை இத்தடை அமுலில் இருக்கும். இதற்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றை நடாத்துவதற்கு உரிய அதிகாரத்தை கொண்ட தரப்பிடமிருந்து அனுமதி பெற வேண்டுமெனவும் என புதிய சுகாதார வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில் பின்பற்றுமாறு பொதுமக்களை வைத்திய நிபுணர் அசேல குணவர்தன கேட்டுக் கொண்டுள்ளார்.
முடிந்தவரை வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறும், சமூகத்துடன் தொடர்புபடுவதை தவிர்க்குமாறும் மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை க.பொ.த. சாதாரண தர மற்றும் க.பொ.த. உயர் தர மாணவர்களுக்கு மட்டும் பிரத்தியேக வகுப்புகள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கொள்ளளவில் 50% பங்கேற்புடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment