Ads (728x90)

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கொழும்பில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியானது எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக  ஆரம்பமாகி, கொள்ளுப்பிட்டி சந்தி ஊடாக காலி முகத்திடலை வந்தடைந்தது. 

சமையல் எரிவாயு, பால் மா, அரிசி, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உர தட்டுப்பாட்டால் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் பல பிரதேசங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு கொழும்பிற்கு வரும் வாகனங்கள் பொலிஸாரால் பரிசோதிக்கப்பட்டன.

எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியினை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிற்கு வருகை தர முடியாமற்போனோர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget