Ads (728x90)

திருமண நிகழ்வுகள், விழாக்கள், திரையரங்குகள் மற்றும் உணவகங்களை சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக மீண்டும் வழக்கம்போல் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதுவரை கொள்ளவில்  25% மற்றும் 50%  அனுமதியுடன் இத்துறைகள் முறையாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பிலான வரையறைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெறும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

இந்த துறைகள் மீண்டும் திறக்கப்படும் போதும் முகக்கவசம் அணிதல், பூரண தடுப்பூசி, சமூக இடைவேளை போன்றவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் துறைகளைச் செயல்படுத்துபவர்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சுகாதாரக் கொள்கைகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் இது தொடர்பாக மீண்டும் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட் அனர்த்தத்தின்போது நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கு நீண்ட கால வேலைத்திட்டம் தேவை எனவும், இலாபத்திற்காக குறுகிய கால வேலைத்திட்டங்களை நாட வேண்டாம் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget