Ads (728x90)

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தை கருத்திற்கொண்டு இலவச படகு சேவை கிண்ணியா-குறிஞ்சாக்கேணி களப்பில் கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்களுடன் பெற்றோர் உள்ளிட்ட ஏனையவர்களும் படகு சேவையை பயன்படுத்த முடியும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கிண்ணியாவிற்கும், குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான பாலத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடையும் வரை இப்படகு சேவை முன்னெடுக்கப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

தினமும் காலை 07 மணி தொடக்கம் 08 மணி வரையும், நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 02 மணி வரையும் இலங்கை கடற்படையின் இலவச படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. ஒரு தடவையில் 25 பேர் ஏற்றிச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படகு சேவையை முன்னெடுப்பதற்கு தற்காலிக இறங்குதுறையும் இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகுப்பாதை விபத்தை தொடர்ந்து, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரைக்கு அமைய இந்த இலவச படகு சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை கிண்ணியாவிற்கும், குறிஞ்சாக்கேணிக்கும் இடையில் இன்று பஸ் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலை 6.30 மணிக்கும் பிற்பகல் 02 மணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையினால் பஸ் சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget