Ads (728x90)

நாட்டில் அண்மைக்காலமாக பல இடங்களில் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியமைக்கு அவற்றின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களின் கலவையை முறையான அனுமதியின்றி மாற்றியதாகவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை ஒரு வெப்ப மண்டல நாடாக இருப்பதால் வாயுக் கலவையில் குறைந்த சதவீத புரொப்பேன் மற்றும் அதிக சதவீத பியூட்டேன் இருக்க வேண்டும்.

அண்மையில் கொழும்பு, வெலிகம, கண்டி ஆகிய இடங்களில் இடம்பெற்ற வெடிப்புகளுக்கு வாயுக் கசிவே காரணம் என அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, எரிவாயு சிலிண்டர் கசிவு தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

எல்பி எரிவாயு சிலிண்டர்களின் கலவை மாற்றத்தால் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக கூறும் அறிக்கையை லாப்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது.

இவ்வறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை. ஏனெனில் கலவை அதன் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பராமரிக்கப்படுவதாக அந்நிறுவனத்தின் பொது முகாமையாளரான குலமித்ர பண்டார தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget