இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும், வீடுகளிலும் மாவீரர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.
நேற்று மாலை 6.05 மணியளவில் மணியொலி எழுப்பப்பட்டதை அடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு 6.07 மணியளவில் தமிழர் தாயகப் பகுதிகளிலும் தமிழர்கள் வாழும் தேசங்களிலும் ஒரே நேரத்தில் நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்களிலும், மன்னாரில் பெரியபண்டிவிரிச்சான், ஆட்காட்டி வெளி துயிலுமில்லங்களிலும், யாழ்ப்பாணத்தில் சாட்டி துயிலும் இல்லம். தீருவில் திடல், முல்லைத்தீவில் வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்திலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.
தாயகத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பிற்கு அரசு பல தடைகளை ஏற்படுத்தியபோதிலும் தாயகத்திலுள்ள தமிழர்கள் இன்று உணர்வு பூர்வமாக மாவீரர் நாளை அனுஷ்டித்தனர்.
Post a Comment