இது போன்ற சம்பவங்கள் நாவிமன, மீகொட, அத்துருகிரிய, மீரிகம, அம்பலாங்கொட, கடவத்தை, தியத்தலாவ, கொள்ளுப்பிட்டி, களுத்துறை, கெக்கிராவ, பத்தனை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.
இதனையடுத்து சமையல் எரிவாயுடன் தொடர்புடைய தீப்பரவல்கள் அல்லது வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் அதுகுறித்த தீர்வினை வழங்குவதற்கும் ஜனாதிபதி விசேட குழு ஒன்றினை நியமித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள வீடுகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருந்து பதிவாகிவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும், அவை தொடர்பில் உடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்வைப்பதற்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட குழு ஒன்றினை நியமித்துள்ளார்.
Post a Comment